உச்சம் தொட்ட மதுவிற்பனை!

0
133

நோய் தொற்று பரவல் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, புதுச்சேரியில் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன. நோய் தோற்று பரவலின் இரண்டாவது அலையில் புதுச்சேரி மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அங்கே நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக, ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி மதுபான கடைகள் உட்பட எல்லா விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருந்தாலும் மதுக் கடைகள் மற்றும் பார்கள் போன்றவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 43 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் மதுபான கடை திறக்கப்பட்டது. அதன் காரணமாக, குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது. வழக்கமாக ஒரு நாளில் புதுச்சேரியில் முழுவதும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரையில் மதுபானம் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நேற்று முன்தினம் ஒரே தினத்தில் ஏழு கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டாம் நாளான நேற்றைய தினமும் மதுபான கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.