பல வித சரும பிரச்சனைகளை ஒரே வாரத்தில் விரட்டும் 7 பொருட்கள் கொண்ட மூலிகை வைத்தியம்!!

0
134
7-Ingredient Herbal Remedies That Get Rid Of Various Skin Problems In One Week!!

பல வித சரும பிரச்சனைகளை ஒரே வாரத்தில் விரட்டும் 7 பொருட்கள் கொண்ட மூலிகை வைத்தியம்!!

சருமத்தில் ஏற்படுகின்ற தேமல்,வெண் புள்ளி,படர் தாமரை,அரிப்பு,சொறி,சிரங்கு உள்ளிட்ட பாதிப்புகள் நீங்க புங்கன் பூவுடன் சில பொருட்களை அரைத்து பால் அல்லது நீரில் காய்ச்சி குடித்து வரலாம்.புங்க மரத்தின் வேர்,பூ,காய்,இல்லை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

சருமத்தில் உருவாகின்ற அனைத்து பாதிப்புகளையும் ஆரோக்கியமான வழியில்
முழுமையாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)புங்கம் பூ
2)நன்னாரி வேர்
3)வெள்ளை பூண்டு
4)சீரகம்
5)புளியம் பூ
6)வசம்பு
7)வெப்பாலை அரிசி
8)பால்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி புங்கம் பூ,20 கிராம் நன்னாரி வேர்,2 பல் தோல் நீக்கிய பூண்டு,1/4 தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி புளியம் பூ,ஒரு துண்டு சுக்கு மற்றும் ஒரு தேக்கரண்டி வெப்பாலை அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த விழுதை போட்டு பாலை 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சரும பிரச்சனை முழுமையாக நீங்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)புங்கம் பூ
2)புளி
3)வேம்பு
4)சுக்கு
5)மிளகு
6)சீரகம்
7)இந்துப்பு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி புங்கம் பூ,ஒரு துண்டு புளி,ஒரு தேக்கரண்டி வேம்பு,ஒரு துண்டு இடித்த சுக்கு,1/4 தேக்கரண்டி மிளகு,1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் சிறிது இந்துப்பு போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் தேமல்,சொறி,சிரங்கு,கரப்பான்,படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்கள் அகலும்.