பிரபல திமுக பிரமுகர் மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு! சொகுசு காரில் ஏற்பட்ட பரிதாபம்!
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், கோரமங்களா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆடி சொகுசு கார் ஒன்று, நள்ளிரவு நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வண்டி ஓட்டியவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டனர்.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர்களில் ஒருவர் ஓசூரில் உள்ள திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் என தெரியவந்துள்ளது. இது தவிர கேரளாவைச் சேர்ந்த ஒருவரும், வடமாநிலத்தவர் இரண்டு பேரும் மற்றும் மூன்று பெண்களும் விபத்தில் உயிரிழந்து உள்ளனர் எனபது குறிப்பிடத் தக்கது. இந்த காரை எம்எல்ஏவின் மகன் தான் ஓட்டியுள்ளார். இந்நிலையில் பெங்களூரின் மெயின் ஏரியாவான கோரமங்களா பகுதியில் செல்லும் போது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால், மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் இது குறித்து மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பார்ட்டி ஏதும் சென்றார்களா? அல்லது சொகுசு காரில் வேறு ஏதேனும் தொழில் நுட்ப கோளாறா? எனவும் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.