Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை… பழிவெறியில் நடந்த கொடூரம்…!

பழிக்கு பழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம், புனே நகரில் பீமா நதி ஒன்று ஓடிகொண்டிருக்கிறது.இந்த நதிகரையின் ஓரமாக கடந்த 18, 91ம் தேதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி அன்று 3 குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சடலத்தில் இருந்து செல்போஅனி கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் 7 ப்ரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் மோகன் பவார் (வயது 50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து, நடைபெற்ற விசாரணையில் அந்த வீட்டின் பெண் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில், தீவிர விசாரணையில் அவர்கள் கொலைசெய்யப்பட்டனர் என்ற உண்மை தெரியவந்தது.

மோகனின் உறவினர் ஒருவரின் மகன் சமீபத்தில் உயிரிழந்ததாகவும் அதற்கு மோகனின் குடும்பத்தினர் காரணம் என அவர் நினைத்து வந்ததால் பழிக்கு பழியாக குடும்பத்தையே கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version