மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

0
148

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 36 லட்சத்து 33 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன் அடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு புதிதாக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என சட்டசபை கூட்டத் தொடரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த விதத்தில் 4 848 செவிலியர்கள், 2448 சுகாதாரப் பணியாளர்கள் என்று ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 296 நபர்களை பணியில் அமர்த்தி கொள்வதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் அவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என அவர் கூறியிருக்கிறார் இந்த பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.