Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

70 மில்லியன் டாலர் திரட்டப்பட்ட கட்சி மாநாடு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோ பைடன், துணையதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் திருவாட்டி கமலா ஹேரிஸ் கூட்டணி தங்கள் பிரசாரத்திற்கு 70 மில்லியன் டாலர் திரட்டியுள்ளனர். கட்சியின் 4 நாள் தேசிய மாநாட்டில் அந்த நிதி திரட்டப்பட்டது. மாநாட்டின் ஒளிபரப்பை இணையத்தின் மூலம் 122 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். தொலைக்காட்சியில் 85.1 மில்லியன் பேர் பார்த்ததாக பைடன் பிரசாரக் குழு தெரிவித்தது.

கடந்த மாதம் நடந்த நிதித்திரட்டு நடவடிக்கைகளில் 140 மில்லியன் டாலர் திரட்டப்பட்டது. அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழு 165 மில்லியன் டாலரைத் திரட்டியது. இதுவரை டிரம்ப் தரப்பு 300 மில்லியன் டாலருக்கு மேல் திரட்டியுள்ளது. அதே நேரத்தில் பைடன் தரப்பு சுமார் 294 மில்லியன் டாலரைத் திரட்டியுள்ளது. நவம்பர் மாதத் தேர்தலுக்கென விளம்பரங்கள் உள்ளிட்ட செலவுகளுக்கு நிதி பயன்படுத்தப்படும்.

Exit mobile version