அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி!! மாணவர்கள் குழப்பம்!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஓத்திவைக்கப்படன. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. பின் கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று இந்த தேர்வுகளின் முடிவு அதிகாரபூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இது மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பற்றிய மாணவர்கள் கூறுகையில் அண்ணா பல்கலைகழகம் குழப்பமான சாப்ட்வர்- ஐ பயன்படுத்தி தேர்வு நடத்தியதால் தான் இந்த 70 சதவிகித தோல்வி நேர்ந்துள்ளது. அந்த சாப்ட்வேர் மாணவர்கள் தேர்வு எழுதும் சமதில் சிறிது சத்தம் வந்தாலோ இல்லை கேமராவைப் பார்க்காமல் போனாலோ அதை மாணவர்கள் முறைக்கெடு செய்ததாகச் சித்தரிக்கின்றது.
தங்களது மொபைல் அல்லது கணினியின் திரையை பார்த்து கேள்விகளைக் கூட வாசிக்க முடியவில்லை. அதற்கும் கூட வார்நிங் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளனர். அனைத்து மாணவர்களும் தனி அறை கிடைக்குமா? அனைத்து மாணர்களின் சுற்றுப்புறமும் சத்தமில்லாமல் இருக்குமா? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்து அண்ணா பல்கலைகழகம் மதிப்பெண்களை மறுபரிசலனை செய்யவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.