Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி.

74th-republic-day-celebration-chief-minister-m-k-stalin-and-governor-r-n-ravi-who-made-tamil-nadu-proud

74th-republic-day-celebration-chief-minister-m-k-stalin-and-governor-r-n-ravi-who-made-tamil-nadu-proud

74 வது குடியரசு தின விழா!! சிறப்பாக அமைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கவர்னர் ஆர்.என்.ரவி.

இந்திய குடியரசு நாள் இந்திய ஆட்சி காண ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்ட செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்த நன்னாளில் காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதி மொழியை அனைவரும் முன்மொழிவார்கள்.

பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதிகளும் நமது தாய் நாட்டிற்கு கேடு விளை வித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது மனிதனுக்கு இறைவனுக்கும் செய்யும் துரோகம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவானது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 74 வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் மூவர்ண தேசிய கொடியை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்ற தமிழ்நாடு முதல்வர்-மு.க.ஸ்டாலின் அவர்களும் மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர். பின்பு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஐந்து பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அவர்களின் பட்டியல் சென்னை தலைமை காவலர் சரவணன், வேலூர் செவிலியர் ஜெயக்குமார், பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீ கிருஷ்ணன், தஞ்சை செல்வம் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கினார்.

இதனை அடுத்து காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு காவல் நிலையங்களுக்கும் மன விருதைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் ரவி வழங்கி கௌரவித்தனர்.

மேலும் பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதனை முதல்வரும் கவர்னரும் உற்சாகத்தோடு பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version