Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் 7500 ரூபாய் மாணவர்களை தேடி வருகின்றது! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! 

7500 rupees per month is looking for students! Tamil Nadu government announcement!

7500 rupees per month is looking for students! Tamil Nadu government announcement!

 

 

யூபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாத மாதம் 7500 ரூபாய் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில்  நடைபெற்று வரும் நிலையில் திமுக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம் மூலமாக பேருந்துகளில் இலவச பயணம், பெண்களுக்கு திருமண உதவித் தொகை திட்டம் மூலமாக பட்டபடிப்பு படித்த பெண்களுக்கு 50000 ரூபாய் உதவித் தொகையும் 8 கிராம் தங்கமும் பட்டப்படிப்பு படிக்காத பெண்களுக்கு 25000 ரூபாய் தொகையும் 8 கிராம் தங்கமும் வழங்கும் திட்டம், பெண்களுக்கு விவசாய நிலம் வாங்க உதவித் தொகை திட்டம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று பல நலத்திட்டங்கள் அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதே போல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவிடும் வகையிலும் தமிழக அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்துகின்றது. மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் போல பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை மாணவர்களின் நலனுக்காக அமல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் மாதம் 7500 ரூபாய் உதவித் தொகை பெறவுள்ளனர்.

மத்திய அரசு நடத்தி வரும் சிவில் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் 1000 பேரை தேர்வு செய்து மாதம் 7500 ரூபாய் உதவித் தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல்நிலை தேர்வுக்கு தயாராகி வரும் 1000 மாணவர்களுக்கு 10 மாதங்கள் இந்த 7500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் இந்த திட்டத்தில் கீழ் உதவித் தொகை பெற்ற மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 47 மாணவர்களில் 39 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வெற்றி பெற்றவர்கள் தான்.

கடந்த 2023ம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 1000 மாணவர்களில் 2024ம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் 276 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து யூபிஎஸ்சி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து 2025ம் ஆண்டு நடைபெறும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 1000 பேர் தேய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் துவக்கமாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களில் 13 மாணவர்களுக்கு ஏற்கனவே 7500 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தில் மாதம் 7500 ரூபாய் பெறுவதற்கு இந்தாண்டுக்கான தேர்வு முடிந்துள்ள நிலையில் விரைவில் அடுத்த பேட்ஜ்க்கான தேர்வு நடைபெறவுள்ளது.

இது மட்டுமில்லாமல் சென்னையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4000 சதுர அடி அளவில் 200 மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் தமிழ்புதல்வன் யுபிஎஸ்சி ஸ்டடி ஹால் என்ற பயிற்சி வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த திட்டம் மூலமாக மாணவர்களின் செலவுகளில் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Exit mobile version