75000 பேருக்கு அரசு வேலை கன்பார்ம்.. இவர்களது ஓய்வூதியம் உயர்வு!! சுதந்திர விழாவையொட்டி தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
461
75000 government jobs confirmed.. Their pensions will be increased!! Tamil Nadu government's amazing announcement on the occasion of Independence Day!!

75000 பேருக்கு அரசு வேலை கன்பார்ம்.. இவர்களது ஓய்வூதியம் உயர்வு!! சுதந்திர விழாவையொட்டி தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

 

சுதந்திர தினமான இன்று(ஆகஸ்ட்15) முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் 75000 பேருக்கு அரசு வேலை, 1000 முதல்வர் மருந்தகங்கள் போன்ற முக்கிய அறிவிப்புகளை முதல்வர். முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

 

இந்தியா முழுவதும் இன்று(ஆகஸ்ட்15) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்15) காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடியேற்றினார். அதன் பின்னர் சுதந்திர தினச் சிறப்பு உரையாற்றிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்

 

* எதிர் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75000 பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

* கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

* மக்களுக்காக குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவதற்காக முதல்வர் மருந்தகம் தொடங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 1000 மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும்.

 

* முன்னாள் இராணுவ வீரர்களின் நலன் காக்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் மூலமாக முன்னாள் இராணுவ வீரர்கள் வங்கிகள் மூலமாக 1 கோடி ரூபாய் வரை கடன் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.

 

* தியாகிகள் வாங்கும் ஓய்வூதியம் 21000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

 

* குடும்ப ஓய்வூதியம் 11500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

 

* வயநாடு சம்பவம் போல இங்கு ஏற்படாமல் இருக்க ஊட்டி, நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.

 

* மேலும் நீலகிரி உள்பட அனைத்து மலைப் பகுதிகளிலும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பல்துறை வல்லுநர் குழு ஆய்வு செய்யும் என்று கூறிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை பேசி பெருமிதம் தெரிவித்தார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கலைஞர் உரிமை தொகை திட்டம், காலை உணவுத்திட்டம், முன்னாள் தலைவர்களுக்கு மணிமண்டபம்,  சிலை நிறுவியது போன்ற பல முக்கியமான திட்டங்களை பற்றி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.