Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்!

75th Independence Day Elixir Festival! Distribution of national flag to every house in Theni!

75th Independence Day Elixir Festival! Distribution of national flag to every house in Theni!

 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா! தேனியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி விநியோகம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீடுகள் தோறும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்கப்பட்டது. தமிழக அரசு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தை அமுதப் பெருவிழாவாக கொண்டாட அறிவுறுத்தி இருந்தது.
இதனை அடுத்து இல்லங்கள் தோறும் தேசியக்கொடியினை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் இல்லங்களில் கொடிகளை ஏற்ற பேரூராட்சி தலைவர் சந்திரகலா தேசிய கொடியை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் . மேலும் 18 வார்டுகளிலும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கொடிகளை வழங்கினார்கள்.
Exit mobile version