Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் பலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தேசியக்கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் சுதந்திர தினத்தின் கொண்டாட்டங்கள் என்பது இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தற்போது கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினம் நாட்டின் புதிய ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

இன்று நம்முடைய நாட்டின் விடுதலைக்காக போராடிய முன்னோர்களை மற்றும் தியாகிகளை நினைவு கூற வேண்டிய தருணம். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக கொண்ட கனவுகளை நினைவாக்க வேண்டிய கடமை, நிறைவேற்ற வேண்டிய கடமை, நமக்கிருக்கிறது. அண்ணல் காந்தியடிகள், அம்பேத்கார், சாவர்க்கர், நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், லால்பகதூர் சாஸ்திரி, போன்ற தலைவர்கள் நாட்டின் மீது பெரும் கனவுகளை சுமந்து போராடியவர்கள் என தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட தலைவர்களை நாடு தற்போது நினைவு கூர்ந்து வருகிறது. மங்கள் பாண்டே தொடங்கி பிஸ்மில் பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களும் பழங்குடியின தலைவர்களான பிர்சா முண்டா சீதாராமராஜு, ராணி லக்ஷ்மி பாய், சென்னம்மா பாரதி, ஜெயபிரகாஷ் நாராயணன், என நாட்டின் விடுதலைக்காக எல்லா தரப்பிலும் தலைவர்கள் முன்னின்று வழி நடத்தினார்கள் என கூறியிருக்கிறார் பிரதமர்.

இதில் பெண் வீரர்கள் பலரும் அடங்குவார்கள், பெண்களின் வீர தீரத்தை நாம் ஒருபோதும் மறக்காமல் நினைவு கூற வேண்டும். இது போன்ற மிகப்பெரிய தலைவர்களை இந்தியா கொண்டிருப்பதை நாம் பெருமை கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் தெரிவித்து வருகிறார். அதோடு ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்ந்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version