Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் 77000 ரூபாயில் மத்திய அரசில் வேலை!!! இவங்க எல்லாரும் அப்ளை செய்யலாம்!!!

#image_title

மாதம் 77000 ரூபாயில் மத்திய அரசில் வேலை!!! இவங்க எல்லாரும் அப்ளை செய்யலாம்!!!

மாதம் 77000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் நேஷ்னல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகின்றது. விவசாயிகளின் நலன்களை காக்கும் நிறுவனமாக இயங்கி வரும் நேஷ்னல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் விவசாயத்திற்கு தேவையான விதைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் பல்வேறு வகையான 89 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி பற்றிய விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை…

பணியின் பெயர் – ஜூனியர் அதிகாரி, ஜூனியர் அலுவலர், மேனேஜ்மெண்ட் பயிற்சியாளர், பயிற்சியாளர்(வேளாண்மை), பயிற்சியாளர் (குவாலிட்டி கண்ட்ரோல்), பயிற்சியாளர் (மார்கெட்டிங்), பயிற்சியாளர்(ஸ்டெனோ கிராபர்), பயிற்சியாளர்(வேளாண்மை ஸ்டோர்ஸ்)

மொத்த காலிப்பணியிடங்கள் – 89

கல்வித் தகுதி – பி.எஸ்.சி வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக் ஆகிய படிப்புகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – ஜூனியர் அலுவலர், ஜூனியர் அதிகாரி பணிக்கு 30 வயதுக்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேனேஜ்மெண்ட் பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் பணிகளுக்கு 27 வயதுக்குள் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் – ஜூனியர் அலுவலர், ஜூனியர் அதிகாரி 22000 ரூபாய் முதல் 77000 ரூபாய் வரை, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் 55680 ரூபாய், பயிற்சியாளர் 23664 ரூபாய்

தேர்வு செய்யும் முறை – எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://www.indiaseeds.com/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.09.2023

இந்த பணி பற்றிய மற்ற விவரங்கள் பற்றி அறிய https://www.indiaseeds.com/career/2023/NSC2023Rec/Rec202308.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து பார்க்கலாம்.

 

Exit mobile version