Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா  ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து  திமுக தேர்தல் வியூகப்   பணிகளை செய்து வருகிறார்.

மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of common)  என்ற அமைப்பை தொடங்கி  அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள்  ஒருங்கினைத்து திட்டமிட்டு நடத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் Populous Empowerment Network நிறுவனத்தில் இணைத்து 2019 க் முதல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பணியாற்றி வந்தார். மேலும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிட்டு கொடுத்துள்ளார்.

இதனால் திருமா மற்றும் ஆதவ் அர்ஜூனா நெருக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில  துணைத் தலைவர்  பதவி  திருமா அவர்கள்  கொடுத்தார். இந்த நிலையில் தான்  அமலாக்க துறை அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில்  சோதனை நடைபெற்றது. மேலும் அவரது மாமனார்  அதிபர் மார்ட்டின் கோவை மற்றும் சென்னை  அலுவலக பகுதிகளில்  ed சோதனை நடந்தது.

இந்த மார்டின்  லாட்டரி விற்பனை செய்து வருபவர். சோதனை முடிவில் அரசாங்கத்திற்கு கணக்கில் காட்டாத ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்து இருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version