“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

0
535
#image_title

“சிக்கன் சூப்” குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்!!

நம்மில் பலருக்கு கோழி இறைச்சி என்றால் அலாதி பிரியம்.அதிலும் நாட்டு கோழி என்றால் சொல்ல வேண்டியதில்லை.இந்த நாட்டுக் கோழி இறைச்சியில் அதிகளவு பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது.அதேபோல் புரதம்,வைட்டமின் ஏ,பி,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்து இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

இந்த நாட்டுக்கோழி இறைச்சியில் வறுவல்,பிரட்டல்,குழம்பு,சசுக்கா என்று பல வகைகளில் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.இவற்றை காட்டிலும் சூப் செய்து பருகினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

நாட்டுக்கோழி சூப் குடிப்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 அற்புத நன்மைகள்:-

*வாரத்திற்கு ஒருமுறை நாட்டுக்கோழி சூப் குடித்து வந்தோம் என்றால் உடலில் இரத்த அழுத்த பாதிப்பு சரியாகும்.நாட்டுக்கோழியில் உள்ள புரதங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

*நாட்டுக்கோழியில் உள்ள கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்குவதோடு அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

*நாட்டுக்கோழி சூப் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

*நாட்டுக்கோழி சூப் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

*நாட்டுக்கோழியில் உள்ள அமினோ அமிலம் மற்றும் புரதம் உடலில் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

*உடல் எடையை குறைக்க வேண்டும் அதே சமயம் அசைவமும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாட்டுக்கோழி சிறந்த உணவாக இருக்கும்.

*நெஞ்சு சளி இருப்பவர்கள் நாட்டுக்கோழியில் சூப் செய்து குடித்தால் அந்த பாதிப்பு விரைவில் சரியாகும்.

*அதேபோல் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும்,செரிமானத்தை மேம்படுத்தவும் நாட்டுக்கோழி சூப் பெரிதும் உதவும்.