அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

0
107
#image_title

அகத்தி கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதில் கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு.அதிலும் அகத்தி கீரையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த கீரையில் நார்ச்சத்து,புரதம்,மாவுச்சத்து,தாதுப்புக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ மற்றும் சி என்று மொத்தம் 63 வகை சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதில் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் கொண்ட அகத்தி என்று அகத்தி கீரையில் இரு வகைகள் இருக்கிறது.இந்த அகத்தி கீரையில் மட்டுமல்ல அதன் பூ,வேர்,பட்டை என்று அனைத்திலும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கிறது.

அகத்தி கீரையை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்:-

*வறட்டு இருமல் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் அகத்தி இலையை அரைத்து சாறு பிழிந்து 1/4 டம்ளர் வீதம் அருந்த ஒரே மாதத்தில் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.

*அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தோம் என்றால் தீராத மலச்சிக்கல் பாதிப்பும் விரைவில் சரியாகி விடும்.

*பித்தம் இருப்பவர்களுக்கு அகத்தி கீரை அற்புத மருந்தாக செயல்படுகிறது.அதேபோல் வாத நோயையும் சரி செய்யும் தன்மை அகத்தி கீரைக்கு இருக்கிறது.

*அகத்தி இலையில் 1 தேக்கரண்டி அளவு சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.அதே அளவு தேன் எடுத்து சாற்றில் கலந்து பருகினால் வயிற்றுவலி சரியாகும்.

*வாய் புண் மற்றும் வயிற்றுப்புண் இருப்பவர்கள் அகத்திக் கீரையை வாரத்தில் 2 அல்லது 3 வேளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

*அகத்தி கீரையில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து இருப்பதால் இவை உடலில் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.அதேபோல் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

*அகத்திக் கீரை உண்பதினால் உடல் சூடு தணியும்.அதுமட்டும் இன்றி அகத்திக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டோம் என்றால் குடல்புண்,அரிப்பு,சொறி சிரங்கு உள்ளிட்ட தோல் நோய் பாதிப்புகள் சரியாகும்.

*அதுமட்டும் இன்றி அகத்தி கீரை இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு,இரத்த குழாய்கள் தடிமன் ஆவது,இரத்த சோகை உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்குகிறது.அதோடு இளநரை,வறண்ட சருமம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உரிய தீர்வாக அகத்தி கீரை இருக்கிறது.