பொதுத் துறை வங்கிகளில் முதன்மையாக இருக்கும் SBI என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கியில் ஆவணங்கள் இல்லாமல் 8 லட்சம் ரூபாய் வரை பர்சனல் லோன் வாங்க முடியும். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
நாட்டில் பல பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றது. அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் முதன்மையான வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதாவது எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத் ஸ்டேட் வங்கி ஆகும். இந்த வங்கி பல விதமான கடன்களை வழங்கி வருகின்றது. மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு கிளைகள் இருக்கின்றது.
லோன் என்பது அனைத்து மக்களுக்கும் அடிப்படையான ஒன்றாக கருதப்படுகின்றது. சில பேர் தங்களுடைய அவசரத் தேவைக்காகவும் ஒரு சிலர் படிப்புக்காகவும் மேலும் ஒரு சிலர் முதலீடு செய்வதற்காகவும் லோன் வாங்குகின்றனர். அந்த வகையில் ஆவணங்கள் இல்லாமல் எஸ்.பி.ஐ வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது லோன் வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் ஒரு சில தகுதிகளை கொண்டிருக்க வேண்டும். லோன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு உரிய தகுதிகள் சிலவற்றை பார்க்கலாம்.
* பர்சனல் லோன் அதாவது தனிநபர் கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு வயதானது 21 முதல் 58க்குள் இருக்க வேண்டும்.
* தனிநபர் கடன் வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் வருமானம் ஈட்டக்கூடிய வகையில் எதாவது ஒரு வேலையில் இருக்க வேண்டும். அதாவது அரசு வேலையிலோ அல்லது தனியார் வேலையிலோ அல்லது சொந்தமாக தொழில் செய்பவராகவோ இருக்க வேண்டும்.
* தனிநபர் கடன் வேண்டும் என்று நினைப்பவர்களின் மாத வருமானம் 15000 ரூபாயாக இருக்க வேண்டும்.
இந்த மூன்று தகுதிகளும் ஒரு நபருக்கு இருந்தால் அவர்கள் அனைவருக்கும் எஸ்பிஐ வங்கி மூலமாக 8 லட்சம் வரையில் தனிநபர் கடன் பெற முடியும்.
தனிநபர் கடன் பெற வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அதாவது மேற்கண்ட மூன்று தகுதிகளை உடைய நபர்கள் தனிநபர் கடன் பெறுவதற்கு வங்கியில் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், Form 16, முகவரிச் சான்று, சம்பளம் பெறும் ரசீது, ஆறு மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட், ஐ.டி ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.
எஸ்பிஐ வங்கியில் லோன் பெறுவதற்கு ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் லோன் வேண்டும் என்று நினைக்கும் நபர் எஸ்பி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் பர்சனல் லோன் என்பதை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்து பின்னர் தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவம் லோன் பெற வேண்டும் என்று நினைக்கும் நபர் விண்ணப்பிக்கும் பொழுது கொடுத்த எஸ்பிஐ வங்கிக்கு செல்லும். பின்னர் அந்த வங்கியில் இருக்கும் அதிகாரி நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் சரியா அல்லது தவறா என்பதை சரிபார்த்து பின்னர் லோன் வழங்குவதற்கான உத்தரவை கொடுப்பார்.
அதே போல நேரடியாக வங்கிக்குச் சென்றும் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது லோன் தேவைப்படும் நபர் எஸ்பிஐ வங்கிக்கு சென்று தனிநபர் கடனுக்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அதில் இணைத்து அந்த விண்ணப்பத்தை மேனேஜரிடம் கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் முறை மாதிரியே வங்கி மேனேஜரும் நீங்கள் கொடுத்த அனைத்து ஆவணங்களும் தகவல்களும் உண்மையா இல்லையா என்பதை சரிபார்ப்பார். அதன் பின்னர் லோன் வழங்குவதற்கான ஆணையை கொடுப்பார்.
வங்கியின் மேனேஜர் பர்சனல் லோன் அதாவது தனிநபர் கடன் வழங்க ஒப்புதல் வழங்கி விட்டால் நீங்கள் விண்ணப்பித்த கடன் தொகையை வங்கி உங்களுக்கு வழங்கும். இந்த தொகை நேரடியாக உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை எடுத்து நீங்கள் உங்களுடைய தேவைக்குப் பயன்படுத்தலாம். முக்கியமான அறிவுரை என்னவென்றால் எந்தவொரு வங்கியில் எந்த லோன் பெற வேண்டும் என்றாலும் அந்த லோனை பெறுவதற்கு முன்பாக வங்கியின் விதிமுறைகளை நன்கு படித்துத் தெரிந்து கொண்டு பின்னர் லோன் பெற வேண்டும்.