Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு உதட்டை கலராக்க.. 8 இயற்கை தீர்வுகள் உங்களுக்காக..!

#image_title

கருப்பு உதட்டை கலராக்க.. 8 இயற்கை தீர்வுகள் உங்களுக்காக..!

சூடான உணவு, புகை பழக்கம், உடலில் பிரச்சனை இருந்தால் உதடு பொலிவற்று கருமையாக காட்சி அளிக்கும். இந்த கருமை நிறைந்த உதட்டை பொலிவாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

*எலுமிச்சை சாறு

உதடுகளின் மேல் உள்ள கருப்பை நீங்க எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சம் பழச் சாறு உதடுகளில் உள்ள டெட் செல்களை நீக்கி உதட்டை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*பீட்ரூட்

ஒரு துண்டு பீட்ரூடை கொண்டு உதட்டை மஜாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதினால் உதட்டின் நிறம் மாறும்.

*சர்க்கரை

உதட்டில் உள்ள அழுக்கை நீக்கி பொலிவாக வைக்க சர்க்கரை பெரிதும் உதவுகிறது. உதட்டிற்கு தேவையான அளவு சர்க்கரை எடுத்து பூசி மஜாஜ் செய்யவும். இதனால் உதட்டில் உள்ள வறட்சி, டெட் செல்கள் நீங்கி உதடு மிருதுவாக இருக்கும்.

*தேன்

உதட்டை அழகு பெற வைக்க தேன் சிறந்த தீர்வாகும். தேனை உதட்டில் தடவினால் உதடு மிருதுவாகும்.

*உருளைக்கிழங்கு

உதட்டில் உள்ள கருமை நீங்க உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து உதடுகளில் பூசி வரலாம்.

*ரோஜா இதழ்

ரோஜா இதழை அரைத்து பேஸ்டாக்கி உதடுகளில் தடவி வந்தால் அவை மிருதுவாக மாறும்.

*கொத்தமல்லி தழை

உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற கொத்தமல்லி தழைகளை அரைத்து பூசலாம்.

*காபி தூள் + சர்க்கரை

இந்த இரண்டையும் சம அளவு எடுத்து உதட்டில் அப்ளை செய்து வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

Exit mobile version