Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தடுப்பணையில் குளிக்க சென்ற 8 மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

8 students who went to bathe in detention! The shocking incident that followed!

8 students who went to bathe in detention! The shocking incident that followed!

தடுப்பணையில் குளிக்க சென்ற 8  மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தெலுங்கானா மாநிலத்தில் ராஜண்ணா ஸ்ரீசில்லா என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தை ஒட்டியவாறு மணியார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக தற்போது நதிகளில் எல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது நாம் அறிந்த விஷயம்தான். இந்நிலையில் தடுப்பணையில் மழை வெள்ளமும் வழிந்து ஓடுகிறது. எனவே அப்பகுதியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் சேர்ந்து அங்கே குளிப்பதற்காக 8 பேர் வரை கூட்டு சேர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது 6 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், இரண்டு பேர் கரையிலேயே அமர்ந்து இருந்தனர். மேலும் அந்த மாணவர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அதன் காரணமாக 6 மாணவர்கள் நீரில் மூழ்கியதாகவும், உடன் சென்ற 2 பேர் தெரிவிக்கவே அது குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.

அதை தொடர்ந்து பெற்றோர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சொல்லி உள்ளனர். அதன் பிறகு இந்த விஷயம் குறித்து அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கு குளிக்க சென்ற ஆறு பேரில் ஐந்து பேரை சடலமாக மீட்டனர்.

மேலும் மாயமான ஒரு மாணவனை தீவிரமாக தேடியும்  வருகின்றனர். அனைவரும் 14 முதல் 15, 16 வயது மாணவர்கள் தான். இறந்தவர்களின் விவரம் கோலிபாக கணேஷ் (15) தீகல அஜய் (14), கொங்கா ராகேஷ் (15), ஜடலா வெங்கட சாய் (14) கொங்கா ராகேஷ் (15), ஸ்ரீராம் கிராந்தி குமார் (14) மாணவர்களுக்கு 14 வயதில் இருந்து 16ஒரு விளையாட்டிற்காக தடுப்பணையில் குளிக்கச் சென்று நீச்சல் தெரியாமல் இந்த விபரீதம் தேவையா? இதற்கு அவர்கள் இதையெல்லாம் செய்ய வேண்டும் விளையாட்டுக்காக செய்யப் போய் அது விபரீதத்தில் முடிந்துவிட்டது.

இந்த விஷயம் கேள்விப்பட்டு தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி கே டி ராமராவ் செல்லா குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல்களை தெரிவித்து உள்ளார். மேலும் மீட்பு பணிகளுக்காக ஐதராபாத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புமாறும் அதிகாரிகளுக்கு தகவல் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version