Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கோவையில் நடந்த கொடூரம்! காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கோயம்புத்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் லாரி பேட்டையில் குடியிருந்து வருபவர் ரிஸ்வான் ரிஸ்வான் அந்த பகுதியிலேயே கூலி வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடை முன்னால் விளையாடிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் அந்தப் பகுதிக்கு வந்த ரிஸ்வான் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது .சிறுமியின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அங்கே ஓடி வந்து அந்த சிறுமியை காப்பாற்றி இருக்கிறார்கள். அதோடு ரிஸ்வானை பிடித்து கோயம்புத்தூர் மேற்கு மகளிர் காவல் நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் தற்சமயம் சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.

Exit mobile version