Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீறு கொண்டு எழுந்த ரஷ்ய படையை நாசம் செய்த உக்ரைன்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வந்ததை தொடர்ந்து அந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் அந்த இரு நாட்டுக்கும் பல அறிவுரைகளை வழங்கி வந்தார்கள். இருந்தாலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகநாடுகளின் அறிவுரைகளை கேட்பதாக இல்லை.

உக்ரைன் நாட்டின் எல்லையில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி இருந்த ரஷ்யா நேற்று திடீரென்று உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது.ரஷ்யா உக்ரைன் மீது குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவைகளை கொண்டு நடத்திய தாக்குதல் காரணமாக, உக்ரைன் நிலைகுலைந்து போனது.

அதோடு உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டை ஒருசேர பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தநிலையில், உக்ரைன் அதிபர் தன்னந்தனியாக ரஷ்யாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கு நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

மேலும் உக்ரைனில் வெளியுறவுத்துறை செயலாளர் ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்த வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் மதிப்பு மிக்க தலைவராக இருக்கிறார்.

அதனால் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தால் நிச்சயமாக விளாடிமிர் புட்டின் அவருடைய கோரிக்கைக்கு செவி சாய்ப்பார். தயவுசெய்து இந்தியா சார்பாக போர் நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யாவிடம் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் உக்ரைன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தயவுசெய்து பதற்றத்தை தணிக்கும் விதமாக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் போரை தடுக்க வேண்டும் என்று ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபை வைத்த வேண்டுகோள் ஒருபுறமிருக்க தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய ராணுவ படைகளுக்கு அந்த நாட்டின் அதிபர் உத்தரவிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனை தொடர்ந்து உக்ரைனை பல முனைகளிலிருந்தும் ரஷ்யப் படைகள் நேற்று தாக்க ஆரம்பித்தனர். நேற்று ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்ய ராணுவம் நடத்தியிருக்கிறது என்று உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் இதுவரையில் 137 பேர் பலியாகியுள்ளனர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் இன்று 2வது நாளாகவும் இந்த போர் நீடித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.
.
இந்த சூழ்நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சரான ஹன்னா மால்யார் அவருடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் எதிரி நாட்டின் இழப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இன்று காலை 3 மணி அளவில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 10க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version