Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!! 

80,000 invested and 2 lakhs in profit of cut and root farming!! Farmers thinking of money rain!!

80,000 invested and 2 lakhs in profit of cut and root farming!! Farmers thinking of money rain!!

80 ஆயிரம் போட்டு 2 லட்சம் லாபம் பார்க்கும் வெட்டி வேர் விவசாயம்!! பண மழையில் நனையும் விவசாயிகள்!!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் அருகே பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெட்டி வேர் விவசாயத்தை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள்.இந்த வெட்டி வேரில் இருந்து கைவினை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் என பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்களாம்.

 இந்த வெட்டி வேருக்கு உலகளவில் தேவை இருப்பதால் ஏக்கருக்கு இரண்டரை லட்ச ரூபாய் வருமானம் கிடைப்பதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.அதன்படி ஒரு ஏக்கரில் வெட்டி வேரை சாகுபடி செய்ய 80 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம்.அதில் இருந்து வருமானம் இரண்டரை லட்சம் கிடைக்கும் என்று கூகிறார்கள்.

இதன் பயிர்க்காலம் 10 முதல் 12 மாதங்களாகுமாம்.இதில் பயிரிட்ட பத்தாவது மாதம் இதன் வேரை எடுத்து மறு நடவு செய்து கொள்ளலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.இந்த வெட்டி வேரை மூலிகையாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை.இதனை வைத்து கைவினை கலைஞர்கள் ஏராளமான கைவினை பொருட்களை செய்து வருகிறார்கள்.அதுமட்டுமின்றி திருப்பதி உள்ளிட்ட கோவில்களுக்கு மாலைகளாகவும் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

உலகளவில் இந்த வெட்டி வேருக்கு 500 மெட்ரிக் டன் தேவை இருந்து வருகிறதாம்.இந்தியாவில் மட்டும் 32 முதல் 40 மெட்ரிக் டன் தான் இந்த வெட்டி வேர் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், அவை அனைத்துமே உடனடியாக விற்று தீர்ந்து விடுகிறதாம்.இதனால் இந்த வெட்டி வேர் சாகுபடியில் விவசாயிகள் நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள்.

வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்கள் மூலமும் லாபம் கிடைத்தாலும், அவற்றிற்கு தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும்.ஆனால் வெட்டி வேருக்கு அப்படி அல்ல வறட்சியான இடங்களிலும் இவை வளருமாம்.குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் போதும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது வெட்டி வேர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

Exit mobile version