குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு 83 லட்சம் சம்பளம்!!! வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ள விவேக் ராமசாமி!!!
தனது குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு மாதம் 83 லட்சம் சம்பளத்துடன் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றது என்று அமெரிக்க பிரதமர் வேட்பாளராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அவர்கள் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் முன்னாள் பிரதமர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்தபடியாக இந்திய குடியரசு கட்சியின் சார்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் வேட்பாளராக இருக்கும் விவேக் ராமசாமி அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது.
பிரதமர் வேட்பாளராக இருக்கும் விவேக் ராமசாமி அவர்கள் தன்னுடைய எதிர்காலம் குறித்த அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களுக்கு இடையில் மிக வேகமாக முன்னேறி வருகின்றார். இவருக்கு அபூர்வா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் விவேக், அபூர்வா தம்பதியினர் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள பணிப்பெண் ஒருவரை தேடி வருகின்றனர். அது குறித்து அவர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் “ஆர்வமும் துடிப்பும் மிகுதியாக இருக்கும் ஒரு குடும்பத்துடன் இணைந்து அந்த குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாக பங்கேற்று அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.
வாரத்தில் 96 மணிநேரம் வேலை இருக்கும். அதன் பின்னர் ஒரு வாரம் முழுவதும் விடுமுறை இருக்கும். குழந்தைகளுக்கு தடையின்றி தினசரி நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்யும் வகையில் எங்களின் சமையல்காரர், மெய்காப்பாளர்கள், வீட்டின் பாதுகாவலர்கள், பிற ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், பொம்மைகள், ஆடைகள் ஆகியவற்றை பராமரிக்க வேண்டும். அவர்கள் கட்டுக்கோப்பான சூழலில் வளர்வதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் விவேக் ராமசாமி அவர்களின் பெயரோ அல்லது அவருடைய குடும்பத்தினருடைய பெயரோ எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விளம்பரம் ஒரு வேலை வாய்ப்புக்கான தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வேலை வாய்ப்புக்கான விளம்பரம் விவேக் ராமசாமி அவர்களின் குடும்பத்தின் விளம்பரம் தான் என்பதை தகவல்கள் உறுதி செய்கின்றன.
இந்த வேலைக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய் வழங்கப்படும் அதாவது ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய தாய்மார்கள் அனைவரும் சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.