Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

86 பட்டாக்கள்.. 6 மாத காலத்திற்குள்!! தமிழக அரசு சொன்ன நற்செய்தி!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

86 belts..within 6 months!! Good news from Tamil Nadu government!!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரப் பகுதிகளில் 6 மாத காலத்திற்குள் 86 ஆயிரம் பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது :-

ஆட்சியபினையற்ற புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதோடு சென்னையில் 60,000 கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதே போல சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் 86,368 பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றும் முதல்வர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசு விழா ஒன்றில் 2500 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியதாகவும் , இதனைத் தொடர்ந்து 86,000 பட்டாக்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்புறங்களில் வசிக்கக்கூடிய அவர்களுக்கு 6 மாத காலத்திற்குள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

86,000 பட்டாக்கள் குறித்த விவரங்கள் :-

✓ முதலில் சென்னை மற்றும் சென்னையை சுற்றி இருக்கக்கூடிய மாவட்டங்களில் ஆட்சியபணியாற்ற புறம்போக்கு நிலங்களில் வாழக்கூடியவர்களுக்கு 29,187 பட்டா வழங்கப்பட உள்ளது.

✓ அதனைத் தொடர்ந்து மதுரை நெல்லை போன்ற மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரப் பகுதிகளில் 57,084 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.

இந்த பட்டாக்களை வழங்குவதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு மற்றும் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம் பட்டா போன்றவற்றை வழங்க பிப்ரவரி 24 முதல் 28 வரை சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு அவற்றில் பிப்ரவரி 24ஆம் தேதி மாதவரம் ஆர் கே நகர் திருவிக நகர் கிண்டி மயிலாப்பூர் டி நகர் போன்ற பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றும் பிப்ரவரி 25ஆம் தேதி பெரம்பூர் வா உ சி நகர் எழும்பூர் விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்றும் பிப்ரவரி 26 ஆம் தேதி அம்பத்தூர் மாதாவரம் எழும்பூர் மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்றும் பிப்ரவரி 27ஆம் தேதி அண்ணா நகர் ஆர் கே நகர் எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும் 28ஆம் தேதி சைதை மாதவரம் பெரம்பூர் அண்ணா நகர் மயிலாப்பூர் டி நகர் போன்ற இடங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version