Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

88 சதவீதம் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது… இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

88 சதவீதம் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது… இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு…
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே மாதம் 23ம் தேதியில் இருந்து மக்கள் கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி என்றும் அறிவித்தது.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை இரயில் நிலையங்கள், பேருந்துகள், மேலும் டாஸ்மாக் கடைகளில் கூட கொடுக்கலாம் என்று அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து அறிவிப்பு வெளியானது முதல் தற்போது வரை மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவர் ஒரு நாளுக்கு 20000 ரூபாய் என்ற அளவில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு எந்தவொரு ஆவணமும் தேவையில்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் 88 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி வரை 3.14 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் 42 ஆயிரம் கோடி மட்டுமே மீதம் வரவேண்டியுள்ளது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Exit mobile version