50 நாளில் 9 கேட்பாரற்ற சடலங்கள்! அரசு மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்பு!
இந்த காலகட்டத்தினர் அவர்களை வளர்த்திய பெற்றோரை பார்த்துக் கொள்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனர். தங்களின் சுய இன்பத்திற்காக பெற்றோர்கள் இடையூறாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களது பெற்றோரை முதியோர் இல்லம் மற்றும் பல கோவில்கள் அல்லது வெளியூர்களுக்கு சென்று விட்டு விடுகின்றனர்.அவர்களும் தங்கள் பிள்ளையை நம்பி சென்று விட்டு தெரியாத ஊரில் யாரும் இல்லாத அனாதைகளாக மாறும் அவலம் ஏற்படுகிறது.
பலர் தங்களை விட்டு சென்ற இடத்திலேயே உணவுக்ககா பிச்சை எடுக்கவும் செய்கின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் திடீரென்று உடல்நல குறைவால் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறப்பவர்களின் சடலங்கள் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள சாலைகளில் குறிப்பிட்ட 50 நாட்களில் மட்டும் எட்டு ஆண் சடலமும் ஒரு பெண் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இவர்களது உறவினர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வேறொரு ஊருக்கு வரும் முதியவர்களை இங்கேயே அவரது உறவினர்கள் விட்டு செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் உறவினர் இன்றி அனுமதிக்கப்படும் முதியோர்கள் சரியான உணவு இன்றியும், ஆதரவு இன்றியும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.