Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

#image_title

முடி அசுர வேகத்தில் வளர ஈஸியான 9 டிப்ஸ்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒருவருக்கு அழகே முடிதான். அழகில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இன்றைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் நிறைய பேருக்கு தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறது. இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்துள்ளதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்றி வருகிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

அனைவருக்குமே நீளமான, பளபளப்பான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் பலருக்கும், போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் முடி வளர்ச்சி தடைபடுகிறது. ஆனால் தலைமுடியில் அழுக்குகளாலும், அனைத்து ரசாயனங்களும் சேர்ப்பதாலும் தலைமுடி மோசமடையும். அதனால்தான், தாய்மார்களும், பாட்டிகளும் கூந்தல் பராமரிப்புக்கு இயற்கையான வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்துவார்கள்.

அதெல்லாம் விடுங்கள்.. இனி நாம் என்ன செய்யலாம்.. முடியை எப்படி வேகமாக வளர வைக்கலாம் என்று பார்ப்போம் –

முதலில் வீட்டில் ஹேர்பல் ஆயில் தயார் செய்ய வேண்டும். கறிவேப்பிலை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்தது வர முடி செழித்து வளரும்.

காரட் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால், முடி வளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட் வந்தால் இளநரை நிறம் மாறும்.

உச்சந்தலையில் பொடுகு அதிகமாக இருந்தால், அது முடி வளர்ச்சியை தடைப்படும். பொடுகு தொல்லையிலிருந்து நீங்க, ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, அந்த கலவையை உச்சந்தலையில் தடவ வேண்டும். பின்னர், 1/2 மணி நேரம் கழித்து, மைல்டு ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசி குளித்தால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பித்துவிடுவோம்.

ஆலிவ் ஆயிலை தினமும் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து, அதை வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வர முடி வளர ஆரம்பிக்கும்.

வறண்ட கூந்தல் உள்ளவர்கள் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் மருதாணி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

எலுமிச்சை பழத்துடன், சீகக்காய் கலந்த ஷாம்புவை பயன்படுத்தி குளிக்கலாம். மருதாணியை சேர்ப்பதை விட சீகைக்காய் பயன்படுத்தி குளிப்பது சற்று நல்ல ரிசல்ட் தரும்.

 

Exit mobile version