Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நள்ளிரவில் 9 பேரை பலி வாங்கிய கோர விபத்து

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே நடுஇரவில் நடந்த விபத்து ஒட்டுமொத்த நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலாறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிரக் மீது டெம்போ மோதியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குண்டூர் பகுதியை சேர்ந்த 38 பேர் டெம்போவில் ஸ்ரீசைலம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊரான பலநாடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது அந்த வாகனம் பயங்கரமாக மோதியது.

ட்ரக் மீது மோதிய வேகத்தில் வாகனம் தலைகீழாக விழுந்தது, இதுதொடர்பாக தகவலறிந்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பிறகு உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விபத்து குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 பேர் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது விபத்து நடந்திருப்பதாகவும், டெம்போ வாகனத்தின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே விபத்து உண்டானதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version