9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்! அதிரடி முடிவு எடுத்த திமுக தலைமை!

0
116

தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் எல்லாமே உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த ஒன்பது மாவட்டங்களில் தேர்தலை சந்திப்பதற்காக திமுகவில் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கின்றார். அந்த சமயத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக திமுகவின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஏவ வேலு அவர்களும், தென்காசி மாவட்டத்திற்கு ராமச்சந்திரனும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெரியசாமி மற்றும் தங்கம்தென்னரசு உள்ளிட்டோரும் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களுக்கு இதேபோல பொறுப்பாளர்களை நியமனம் செய்ய திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் நடக்கும் முதல் தேர்தல் என்ற காரணத்தால், 100 சதவீத வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கின்றார். ஆகவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேர்தலை எதிர்கொள்வதற்கு திமுக சார்பாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.