Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

9 people commit suicide in the same family! Shocking information in the investigation!

9 people commit suicide in the same family! Shocking information in the investigation!

ஒரே குடும்பத்தில் 9 பேர் தற்கொலை! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. சாங்கிலி மாவட்டம் மிராஜ் தாலுகா மஹைசலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தனது வீட்டீல் தற்கொலை செய்து கொண்டனர்.

தினம்தினம் அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை செய்து வருவார்கள்.தனது வேலைகளைஅவரவர் செய்து கொண்டிருப்பார்கள். இன்று வெகு நேரம் ஆகியும் யாரும் வெளியில் வராத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குரல் கொடுத்தும்  வராததால் கதவை தட்டியும் ஆட்டியும் பார்த்தார்கள்.

உள்ளே இருந்து எந்த குரலும் அசைவும் தெரியவில்லை.. என்ன ஆகி இருக்கும்? என்று தெரியாமல் அங்குள்ள போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போதுஅனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஒரு வீட்டில் 6 சடலங்களும், மற்றொரு வீட்டில் 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் .

உடலை கைப்பற்றிய போலீசார் அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. குடும்ப சண்டையா , முன்விரோதமா தீராத பகையின் காரணமா , எதனால் இச்சம்பவம் நடந்தது என்று போலீசார் அக்கம் பக்கதினரிடம் விசாரணை நடத்தி வருகையில் திடுக்கென்று செய்தி வெளியானது.

குடும்ப நிலை காரணமாக கருதி கடன் வாங்கியதால் அக்கடனை கட்டமுடியாமல் அனைவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இவை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version