Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

#image_title

பாஜக கட்சியின் 9 ஆண்டு கால சாதனைகள்!! 143 பக்கம் கொண்ட புத்தகமாக வெளியீடு!!

பாஜக அரசு கடந்து வந்த 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி 143 பக்கங்கள் கொண்ட சாதனை புத்தகத்தை பாஜக கட்சி வெளியிட்டுள்ளது.

பாஜக கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. வெற்றிகரமாக 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாஜக கட்சி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கட்சி செய்த பணிகளை பட்டியலிட்டு புள்ளி விவரங்களோடு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள பாஜக சாதனை மலர் 143 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இருக்கின்றது. பாஜக கட்சி 9 ஆண்டுகளில் செய்த சாதனைகளை நாடு முழுவதும் உள்ள பொது மக்களிடையே கொண்டு செல்லும் பிரச்சார பணியை பாஜக கட்சியினர் இந்த புத்தகம் வாயிலாக தொடங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தொடர்ந்து இந்த பணிகள் அடாத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தல் வரை நடக்கவுள்ளது என தெரிகின்றது.

Exit mobile version