கடந்த ஆண்டு மட்டும் 93000 பேர் உயிரிழப்பு! காரணம் இதுதானாம்!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மரணங்களுக்கு மத்தியில் அதிகப்படியான போதைப்பொருட்கள் எடுத்துக் கொண்டதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 93 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 72 ஆயிரமாக இருந்தது.
ஆனால் 2020 ம் ஆண்டு மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதால், இறப்பு எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரவுன் பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சியாளர் பிராண்டன் மார்ஷல் கூறுகையில், இது மனித உயிர்களின் அதிர்ச்சியூட்டும் இழப்பு என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இந்த போதை அடிமைகளை தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவதை கடினமாகி விட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதிலுமே இந்த போதை பழக்கம் அதிகளவு லாக்டவுன் காலத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கூட இந்த வெளிநாட்டு கலாசாரம் அதிகளவு மக்களை அதிலும் கல்லூரி மாணவர்களை மிகவும் பாதிக்கிறது.
கடந்த ஊரடங்கு காலத்தில், திருச்சி, கோவை, சென்னை, போன்ற பெருநகரங்களில், சில அடிமையான மாணவர்களும், அதை திருட்டு தனமாக விற்றவர்களும், என பல நபர்கள் சிக்கி உள்ளனர். மேலும் விமான நிலையங்களில் கூட கிலோ கணக்கில், கஞ்சா, அபின் போன்ற பொருட்களை அதிகாரிகள், பிடித்துள்ளனர்.
நேற்று கூட திருச்சியில் ஏழு மாணவர்களை பிடித்த பொது அவர்களிடம் 5 கிலோ மதிப்புள்ள போதை மருந்து, மற்றும் மாத்திரை உள்ளிட்டவற்றை காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிடித்துள்ளனர். அதிலும் மாத்திரைகளை தூளாக்கி செலின் வாட்டருடன் கலந்து உடலில் செலுத்தி கொள்ளும் பழக்கமும், மாணவர்களிடையே பரவி வருவது கவலை அளிக்கிறது, என்று தன்னாலவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.