Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது!

A 16-year-old girl became a mother! Youth arrested in POCSO!

A 16-year-old girl became a mother! Youth arrested in POCSO!

16 வயது சிறுமி தாயான சம்பவம்! போக்சோவில் வாலிபர் கைது!

ஈரோடு மாவட்டம் கே.என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி.இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு இடையில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் முனியப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பன்.இவருடைய மகன் இளங்கோவன்(22).இவர் அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசி வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இளங்கோவன் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.மேலும் அந்த சிறுமி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார்.இதனை அறிந்த அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாய் பங்களாப்புதூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் இளங்கோவனை கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version