Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

#image_title

தொடர்ந்து குழந்தைகளை விழுங்கும் ஆழ்துளை கிணறுகள்! வீட்டின் அருகே விளையாடிய 2 வயது குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம்! 

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதிர்ச்சியான இந்த நிகழ்வு மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் சேஹோவர்  மாவட்டத்தில் உள்ள முகவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் குஷ்வாஹாலி. இவரது மனைவி ராணி. இந்த  தம்பதியினரின் இரண்டரை வயது மகள் சிருஷ்டி. இவள் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார்.

பெற்றோர் இருவரும் விவசாய பணியில் ஈடுபடவே குழந்தை சிருஷ்டி அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் குழந்தை திடீரென எதிர்பாராவிதமாக அருகே உள்ள மூடப்படாத 300 அடி  ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். குழந்தை காணாமல் போனதால் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டிலேயே பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த ஆழ்துளை கிணறு 300 அடி ஆழம் கொண்டது. 300 அடி ஆழ கிணற்றில் சிறுமி  தற்போது 30 அடியில் சிக்கிக் கொண்டுள்ளார். குழந்தைக்கு  குழியில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கேமராவை இறக்கி குழந்தையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் சிறுமியை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version