Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பேஸ் பேக் பயன்படுத்தினால் 60 வயது பாட்டியும் 30 வயது பெண் போல் காணப்படுவார்!! 100% இளமையை மீட்டு தரும்!!

#image_title

இந்த பேஸ் பேக் பயன்படுத்தினால் 60 வயது பாட்டியும் 30 வயது பெண் போல் காணப்படுவார்!! 100% இளமையை மீட்டு தரும்!!

இன்றைய வாழ்க்கை சூழலில் உடலையோ,முகத்தையோ பராமரிக்க நம்மில் பலருக்கும் நேரம் இன்றி இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காவிட்டால் நாளைடைவில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி விடுவதை போல் நம் சருமத்தை பாதுகாக்க தவறினால் சிறு வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைந்து விடுவோம்.இதனால் சரும பராமரிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி இதழ்கள் – 10

*பன்னீர் – 3 தேக்கரண்டி

*முல்தானி மெட்டி – 1 தேக்கரண்டி
(அல்லது)
கடலை மாவு

*செம்பருத்தி பூ பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1)முதலில் செம்பருத்தி பூ 5 எடுத்து கொள்ளவும்.அதில் உள்ள இதழ்களை மட்டும் தனியாக எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பி ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி இதழ்களை சேர்த்து தண்ணீர் நிறம் மாறும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.இதை நன்கு ஆறவிடவும்.

அடுத்து ஒரு பவுலில் முல்தானி மெட்டி அல்லது கடலை மாவு 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி இதழ் தண்ணீர் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றி கொள்ளவும்.

பின்னர் முகத்தை நன்கு கழுவி கொள்ளவும்.தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் போட்டு நன்கு மசாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடரந்து செய்து வருவதன் மூலம் முகம் பொலிவாகவும்,இளமையாகவும் இருக்கும்.

2)ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு செம்பருத்தி பூ பொடியை சேர்க்கவும்.அடுத்து கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி சேர்க்கவும்.அடுத்து தேவையான அளவு ரோஸ் வாட்டர்(பன்னீர்) சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

பின்னர் முகத்தை நன்கு கழுவி கொள்ளவும்.தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் போட்டு நன்கு மசாஜ் செய்யவும்.பின்னர் 30 நிமிடம் கழித்து முகத்தை நன்கு கழுவவும்.இப்படி தொடரந்து செய்து வருவதன் மூலம் முகம் பொலிவாகவும்,இளமையாகவும் இருக்கும்.

Exit mobile version