Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்!

A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்!

தூத்துக்குடி மாவட்டம் கோமஸ்புரம் பகுதியில் சேர்ந்தவர் உலகமணி(58). இவர் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வளையல் வியாபாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்திற்கு வியாபாரம் செய்ய. பாற்று ஓடை பகுதியில் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் மாற்று பாதையான தூத்துக்குடி துறைமுகம் மதுரை ரோட்டில் பாலன் வேலை முடிவடையும் இடத்தில் சென்று மோட்டார் சைக்கிள் திருப்பினார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் தூக்கி வீசப்பட்ட வியாபாரி பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவரை மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் கூறினார்கள். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பெயரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் சப் இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து உலகமணி மீது மோதி சென்ற வாகனத்தின் விபரம் குறித்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version