Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

ரோமியோவாக காட்சியளிக்கும் பிச்சைக்காரன் பட ஹீரோ! வெளியானது புது அப்டேட்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ‘விஜய் ஆண்டனி’.இவர் பாடகர், தயாரிப்பாளர்,நடிகர் என பல அவதாரங்களை எடுத்து புகழ் பெற்று வருகிறார்.இவர் இசையமைத்து இவரே பாடிய பாடல்களான ஆத்திச்சூடி,நாக்க முக்கா உள்ளிட்ட பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவரது இசையும் சரி பாடலும் சரி எப்பொழுதும் வித்தியாசமான அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருக்கும்.இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரை தொடர்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘நான்’ என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இவர் தேர்வு செய்யும் திரைக்கதைகள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருப்பதினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.இவர் நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான்,பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றியை தேடி தந்தது.இவர் நடிப்பில் கடைசியாக உருவான ‘கொலை’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து தற்பொழுது இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் இவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகின்றது.இந்நிலையில் தற்பொழுது இவர் படத்தின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் “என்னை ரொமான்டிக் ஹீரோவா பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி.உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது” என்று பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி.

Exit mobile version