ஒரு வெற்றிலை இருந்தால் மூல நோயை வேரோடு அகற்றி விடலாம்!
முதலில் மலச்சிக்கல் பாதிப்பாக தோன்றி பிறகு ஆசனவாய் பகுதியில் வீக்கம், வலி போன்றவற்றை உருவாக்கும் நோயாக உள்ள மூலத்தால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மூல நோய் ஏற்பட்ட ஒருவரால் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாது. மலம் கழிக்கும் பொழுது அதிகப்படியான இரத்த போக்கு, ஆசனவாய் பகுதியில் வலி, வீக்கம், எரிச்சல் போன்ற பல தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.
இந்த மூலத்தில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகைகள் உள்ளது. மூலம் ஏற்பட்ட ஆரம்ப நிலையில் வெற்றிலையை பயன்படுத்தி வந்தால் சிகிச்சை இன்றி அதை குணமாக்கி கொள்ள முடியும்.
மூல நோயை குணமாக்கும் வெற்றிலை: இதை எவ்வாறு பயன்படுத்துவது?
வெற்றிலையை காம்பு நீக்கி உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மூல நோய் புண்கள் குணமாகும்.
வெற்றிலையை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஆசனவாய் பகுதியில் தடவினால் அவை விரைவில் குணமாகும்.
வெற்றிலை + கஸ்தூரி மஞ்சளை சம அளவு எடுத்து அரைத்து ஆசனவாய் பகுதியில் பூசி வந்தால் மூல நோய் புண்கள் குணமாகும்.