தினந்தோறும் சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு வரும் பெரும் ஆபத்து.. மக்களே எச்சரிக்கை!!
வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் கோதுமை உணவான சப்பாத்தி தற்பொழுது தென்னிந்தியர்களின் விருப்ப உணவு பட்டியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது.டயட் இருப்பவர்களும்,சர்க்கரை நோயாளிகளும் விரும்பி உண்ணும் உணவு சப்பாத்தி.
கோதுமையில் செலினியம்,நார்ச்சத்து,வைட்டமின் ஈ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இவை புற்றுநோய் செல்களை அளிக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் வாரத்தில் 2 அல்லது 3 முறை கோதுமை உணவுகளை எடுத்து வரலாம்.
அளவிற்கு மீறினால் நஞ்சு என்பது போல் சப்பாத்தியில் நன்மைகள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கோதுமை மாவில் குளூட்டன் என்ற புரோட்டீன் அதிகளவு உள்ளது.இது கோதுமை மாவிற்கு நெகிழ்வு தன்மை தரக்கூடியவையாகும்.இந்த அதிகளவு குளுட்டன் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக செயல்பட அதிக வாய்ப்புள்ளது.
அது மட்டுமின்றி அடிக்கடி சப்பாத்தி சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் கெட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.குளூட்டான் நிறைந்த சப்பாத்தி குடலில் இருக்கின்ற நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும்.தோல் தொடர்பான நோய்கள்,நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சிலருக்கு சப்பாத்தியை கேஸ் அடுப்பு சூட்டில் நேரடியாக சுட்டு சாப்பிடுவது பிடிக்கும்.ஆனால் இந்த பழக்கம் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாக வழிவகுத்துவிடும்.சப்பாத்தி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதனை அளவாக எடுத்துக் கொள்வது தான் சிறந்தது.