மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!

0
217
A bike that runs on alcohol!! Good luck to them!!
மதுபானத்தில் ஓடும் பைக்!! இவர்களுக்கு நல்லதாக இருக்குமே!!
அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் மதுபான வகைகளுள் ஒன்றான பீரில் ஓடும் பைக் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பெட்ரோலுக்கு பதிலாக பீரை பைக்கில் ஊற்றி ஓடும் விதத்தில் அவர் அந்த பைக்கை கண்டுபிடித்துள்ளார்.
பெட்ரோலுக்கு பதிலாக டீசலில் ஓடும் வண்டிகள் உள்ளது. பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் வண்டிகளை கண்டுபிடித்து பலர் சாதனைகளை செய்துள்ளனர். மண்ணெண்ணெய் மூலம் ஓடும் வண்டி கூட கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்தவர் புது விதமான பைக் ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் பெட்ரோலுக்கு பதிலாக பீரை ஊற்றி ஓடும் பைக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பைக்கில் வெப்பமூட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பீரை ஊற்றுவதன் மூலம் அது வெப்பமாகி அந்த உந்துதலால் இந்த பைக் இயங்குகிறது.
பெட்ரோலுக்கு பதிலாக பீரை பயன்படுத்தி ஓடும் இந்த பைக் 150 கிமீ வேகம் வரை செல்லக் கூடியது. அமெரிக்காவில் இது வரை இல்லாத புதிய கண்டுபிடிப்பாக இந்த பீர் பைக் பார்க்கப்படுகின்றது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் கொண்டுவந்தால் மதுப்பிரியர்களுக்கு உகந்த வாகனமாக இந்த பீர் பைக் இருக்கும்.