எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

0
62
#image_title

எலும்பு முறிவை குணமாக்கும் பிரண்டை சட்னி!! இப்படி செய்தால் சுவையாக இருக்கும்!!

பிரண்டையில் அதிகளவு கால்சியம்,கெட்டோஸ்டீராய்டு,ஃப்ரீடீலின்,ரெஸ்வெராட்ரோல், வைட்டமின் சி,இ உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த பிரண்டை கழுத்து வலி,எலும்பு முறிவு,முதுகு வலி,முட்டு வலி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்கும் தன்மை கொண்டது.
ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையில் சுவையான சட்னி செய்து சாப்பிடலாம்.உடலுக்கு பல நன்மைகளை அள்ளி கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பிரண்டை – 1 கப்

*வர மிளகாய் – 6

*உளுந்து பருப்பு – 1/4 கப்

*புளி – 1/2 தேக்கரண்டி

*பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

*எள் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

1) பிரண்டையை சுத்தம் செய்து நறுக்கி வைத்து கொள்ளவும்.

2)அடுப்பில் கடாய் வைத்து அதில் மிளகாய்,உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.அதை ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3)பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டையை சேர்க்கவும்.தொடர்ந்து மிதமான தீயில் வதக்கி எடுக்கவும்.அதை ஆறவைக்கவும்.

4)மிக்ஸி ஜாரில் வர மிளகாய்,உப்பு,புளி சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பிரண்டை மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.பின்னர் தண்ணீர் சிறிதளவு ஊற்றி மைய்ய அரைக்கவும்.

5)இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.பின்னர் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் உளுந்து பருப்பு,கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கி அதை அரைத்து வைத்துள்ள பிரண்டை சட்னியில் சேர்த்து கலக்கி கொள்ளவும்.