Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ஆப் மூலம் தூரத்திலிருந்தும் டிக்கெட் எடுக்க ரயில்வே வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு

முன் கூட்டியே திட்டமிடாத பயணங்களுக்கு மக்கள் Un Reserved பெட்டிகளில் பயணம் செய்ய ஏதுவாக ரெயில்வேயின் முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலியின் வாயிலாக பயணிகள் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை பதிவு செய்ய முடிகிறது.

ரெயில்வே அறிமுகபடுத்திய இந்த முன்பதிவல்லாத டிக்கெட் பதிவு அமைப்பு (யு.டி.எஸ்.) செயலி மூலமாக பயணிகள் அனைவரும் சீசன் டிக்கெட்டுகள், மாதாந்திர பாஸ்கள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் போன்றவற்றை சுலபமாக பதிவு செய்து கொள்ள முடிகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருக்க தேவையில்லாததால் அவர்களின் நேரமும் மிச்சமாகிறது.

தற்போதைய நிலையில் இந்த செயலி மூலமாக பயணிகள், புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை முன்பதிவல்லாத டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடிகிறது. அது தற்போது, ஒரு ரெயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை என தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புறநகர்ப் பகுதிகளில் இந்த தூரம் 2 கி.மீ. தூரத்தில் இருந்து 5 கி.மீ.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினசரி பாசஞ்சர் ரெயில்களிலும், நீண்டதூர ரெயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும் ரெயில்வே வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூர கட்டுப்பாட்டை 10 கி.மீ. அளவுக்கு அதிகரிக்க விரும்பும் மண்டல ரெயில்வே நிர்வாகங்கள், அதுகுறித்து ரெயில்வே தகவல் அமைப்பு மையத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version