Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரிந்த ஜோடியும், பிரியாத நட்பும்!! ஜிவி இசைக் கச்சேரியே ஆரவாரம்..

A broken couple and an unbreakable friendship!! The GV music concert was a blast..

A broken couple and an unbreakable friendship!! The GV music concert was a blast..

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ், பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்த சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 90ஸ் கிட்ஸ் களின் மோஸ்ட் ஃபேவரட் பாடல்கள் இவ்விருவர்களின் காம்போவில் தான் மோஸ்ட்லி பாடி இருப்பார்கள். பெரும்பாலான காதல் பாடல்களை பாடியுள்ளார்கள்.

இவர்களின் 24 வருட திருமண வாழ்க்கையை கடந்த மே மாதம் விவாகரத்து செய்து முடித்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து வலைதளங்களில் அவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் கிளம்பின. இது குறித்து இருவரின் நலன் கருதி இருவரும் இணைந்து எடுத்த முடிவு. இதை யாரும் தவறாக பேச வேண்டாம். இது எங்களுடைய தனிப்பட்ட முடிவு என்று வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். சைந்தவியும் எங்களுடைய நட்பு தொடரும் என்றும் சொல்லியிருந்தார். இவர்களின் காம்போ மோஸ்ட் பேவரட் என்பதால் பலரும் வருத்தமடைந்தனர்.

சைந்தவி பாடல்கள்:

ஜிவி பிரகாஷ் இசை அமைத்து சைந்தவி பாடிய ஒரு சில பிளாக்பஸ்டர் பாடல்கள்: ‘பிறை தேடும் இரவிலே உயிரே’, ‘எள்ளு வய பூக்களையே’, ‘கையிலே ஆகாசம்’, ‘என்னாச்சு ஏதாச்சு’, ‘யாரோ இவன் யாரோ இவன்’ போன்ற பல காதல் பாடல்களை பாடியுள்ளனர்.

இவர்களுக்கு விவகாரத்தான நிலையில் இனிமேல் இருவரும் இணைந்து பாட மாட்டார்கள் என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள். அமரன் படத்தில் இருவரும் இணைந்து பாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை எனத் தெரிந்ததும் ரசிகர்கள் மேலும் வருத்தப்பட்டனர்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘மயக்கம் என்ன’. இதில் இருவரும் இணைந்து பாடிய பாடல் ‘பிறை தேடும் இரவிலே உயிரே’. இந்தப் பாடல் ஆனது தைரியமான பெண்ணின் மனத்தையும், கணவருக்காக அவள் செய்யும் தியாகத்தையும் பற்றி இருப்பதால் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சமீபத்தில் நடந்த ஒரு இசை கச்சேரியில் இவ்விருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடலை சைந்தவியுடன், ஜிவியும் சேர்ந்து பாடும் போது ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். இதுவே தற்பொழுது பலரால் பேசப்பட்டு வருகிறது. விவாகரத்துக்கு பின் இருவரும் இணைந்து மனம் உருகி இப்பாடலை பாடியுள்ளனர். இதைக் கண்ட ரசிகர்களும், பலவிதமான கமெண்ட்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Exit mobile version