Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சொந்த அண்ணனே தங்கையை கொன்ற சம்பவம்! எதற்காக?

எந்த நேரமும் செல்போனில் பேசியபடி இருந்ததால் கூட பிறந்த தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள இலந்தைகுளம் என்ற கிராமத்தில் சாஸ்தா கோவில் என்ற தெருவில் வசிப்பவர் தான் ராமகிருஷ்ணன். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் பெயர் நல்லையா குட்டி என்று அழைப்பார்கள். வயது 29.மகள் பெயர் சரஸ்வதி வயது 25.

சரஸ்வதி எந்த நேரமும் செல்போனில் பேசியபடியே இருப்பாராம். இது குட்டிக்கு பிடிக்காதாம். இருவருக்கும் இதனாலேயே சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் செவ்வாய்கிழமை அருகில் உள்ள பகுதியில் தண்ணீர் பிடிக்க சென்று இருக்கிறார். அதை கவனித்த குட்டி சரஸ்வதியை கூப்பிட்டு பேசி கொண்டு இருந்துள்ளார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே வழக்கம்போல சண்டை வந்துள்ளது.

உடனே ஆத்திரம் அடைந்த குட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியை சரமாரியாக குத்தியுள்ளார் என சொல்லப்படுகிறது. சரஸ்வதி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே தகவல் அறிந்த காவல்துறையினர் சரஸ்வதியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குட்டியை பிடித்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையாக செல்போன் பேசிக்கொண்டு இருந்ததால் தான் கத்தியால் குத்தினாரா? அல்லது சொத்து தகராறா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று காவல்துறையினர் தீவிரமாக குட்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணனே தன் சொந்த தங்கையை கொன்ற படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

 

 

 

Exit mobile version