Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!

A brother who died of a snake bite in this area! The brother who came to the funeral is the same cruelty!

A brother who died of a snake bite in this area! The brother who came to the funeral is the same cruelty!

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!

உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த் மிசாரவின் அண்ணன் அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக கோவிந்த மிசார சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கு அனைத்தையும் முடித்துவிட்டு அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கோவிந்த மிசாரயும் பாம்பு கடித்தது. அப்போது அவர்  சம்பவ இடத்திலேயே கோவிந்த மிசார பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவருடன் வீட்டில் தங்கி இருந்த அவருடைய உறவினர் சந்திரசேகர் என்பவரையும் பாம்பு கடித்து விட்டு அங்கிருந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக கோவிந்த மிசாரவின் உறவினர் உயிர் தப்பித்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்  இது குறித்து மருத்துவ மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கோவிந்த மிசாரவின் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார்கள். மேலும் உள்ளூர் எம்.எல்.ஏ கைலாஷ் சுக்கலாவும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த ஊர் எம் எல் ஏ  இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  கூறினார்.

Exit mobile version