Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

70வது பிறந்தநாளில் பாட்டிக்கு விழுந்த பம்பர் பரிசு!!! 30 வருடங்களுக்கு மாதம் இவ்வளவு லட்சம் கிடைக்கப் போகிறதா!!?

#image_title

70வது பிறந்தநாளில் பாட்டிக்கு விழுந்த பம்பர் பரிசு!!! 30 வருடங்களுக்கு மாதம் இவ்வளவு லட்சம் கிடைக்கப் போகிறதா!!?

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 70 வயது நிரம்பிய பாட்டி ஒருவருக்கு 70வது பிறந்தநாளில் அதிர்ஷடம் நிரம்ப பம்பர் பரிசு ஒன்று அடித்குள்ளது. அதன்படி 30 ஆண்டுகளுக்கு மாதம் குறிப்பிட்ட அளவு லட்சக்கணக்கில் பணம் அவர்களுக்கு வரப்போகின்றது.

லாட்டரி சீட்டு என்றாலே லக் தான். அதாவது அதிர்ஷடத்திற்கு அடுத்த பெயர் தான் லாட்டரி சீட். நம்மில் அனைவரும் லாட்டரி சீட்டுகள் வங்குவோம். ஆனால் லாட்டரி சீட்டுகள் வாங்கும் அனைவருக்கும் பரிசுத் தொகை கிடைப்பது இல்லை. யார் ஒருவருக்கு அதிர்ஷ்டம் நிரம்பியுள்ளதோ அவர்களுக்கே லாட்டரி சீட் மூலமாக பரிசுத் தொகை கிடைக்கும். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பாட்டி ஒருவருக்கு பம்பர் பரிசு அடித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் டோர்கிங் பகுதியில் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பாட்டி வசித்து வருகிறார். இவர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேஷனல் லாட்டரியில் பரிசுச் சீட்டு வாங்கி பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஸ் அவர்களுக்கு அந்த லாட்டரி சீட்டில் 30 ஆண்டுகளுக்கு மாதம் 10000 பவுண்டுகள் கிடைக்கும் விதமாக மெகா பம்பர் பரிசுத் தொகை விழுந்துள்ளது.

இது தொடர்பாக பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டது. முதலில் பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் அந்த மெயிலை பார்த்த பொழுது 10 பவுண்டுகள் என்று நினைத்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து மெயிலை பார்த்த பொழுது பரிசுத் தொகை பற்றிய முழு விவரமும் தெரிய வந்தது.

இதை நம்பாத பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் தனது மருமகனிடம் மெயிலை காண்பித்து பரிசு விழுந்ததை உறுதி செய்தார். அதன் பிறகு பரிசு விழுந்ததை பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் கொண்டாடியுள்ளார்.

மேலும் நேஷனல் லாட்டரி அலுவலகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் தனக்கு பரிசு விழுந்ததை உறுதி செய்தார். அதன் பின்னர் குடும்பத்தினருடன் சேர்ந்து பரிசு விழுந்ததை பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் கொண்டாடினார்.

இது தெடர்பாக பாட்டி டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் அவர்கள் “எனக்கு விழுந்த இந்த பரிசு பற்றி நினைக்கும் பொழுது எனக்கு விசித்திரமாக இருக்கின்றது. 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10000 பவுண்டுகள் நான் பெறுவேன். இந்த பரிசுத் தொகை என்னை 100 வயது வரை வாழும் காரணத்தை அளிக்கின்றது. இந்த பம்பர் பரிசுத் தொகை மூலமாக எங்களுடைய பழைய வீட்டை புதுப்பிக்க உள்ளோம்” என்று அந்த பாட்டி கூறியுள்ளார். 10000 பவுண்டுகள் என்றால் இந்திய மதிப்பில் 10.37 லட்சம் ரூபாய் ஆகும்.

 

Exit mobile version