Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூண்டு தொக்கு இப்படி செய்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

#image_title

பூண்டு தொக்கு இப்படி செய்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!

நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இது மணமாகவும்,உணவின் சுவையை கூட்டுவதாகவும் இருக்கிறது.இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இவ்வளவு ஆரோக்கியத்தை தனக்குள் வைத்திருக்கும் பூண்டில் சுவையான தொக்கு செய்யும் முறை தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறையில் தொக்கு செய்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

*பூண்டு – 1 கப் (உரித்தது)

*நல்லெண்ணெய் – 6 தேக்கரண்டி

*கடுகு – 1 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 1 கப் அளவு பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதனை நன்கு கழுவி உலர விடவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்க்கவும்.அவை பொரிந்து வந்ததும் உரித்து உலர வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்கவும்.பின்னர் மிதமான தீயில் இதை வதக்கி அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை நன்கு ஆற வைக்கவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆறவைத்துள்ள பூண்டு கலவையை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள பூண்டை சேர்க்கவும்.

அடுத்து 2 தேக்கரண்டி மிளகாய் தூள்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.இதை மிதமான தீயில் 10 நிமிடம் வரை வேக விடவும்.

பின்னர் எண்ணெய் நன்கு பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆற விடவும்.பின்னர் இதை ஒரு கண்ணாடி ஜாருக்கு மாற்றி சேமித்து கொள்ளவும்.பூண்டு தொக்கு இந்த முறையில் செய்தால் நீண்ட நாட்கள் வரை கெடாமலும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

Exit mobile version