லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!

0
158

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!

 

விராலிமலை அருகே லோடு ஆட்டோவின் மீது கார் ஒன்று மோதியதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் ரெட் டேக்ஸி வாடகைக் கார் மூலமாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாடகை கார் மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் லஞ்சமேடு அருகே வந்து கொண்டிருந்தது.

 

அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதி பின்னர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தின் மீது மோதியும்  விபத்துக்குள்ளானது. விபத்தில் கார் நொறுங்கி சின்னாபின்னமாகியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் நான்கு பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

 

மேலும் ஒரு நபர் உயிருக்கு போராடிய நிலையில் பலத்த காயங்களுடன் அவசரசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு சுயநினைவு இல்லாததால் உயிரிழந்தவர்கள் பற்றி எந்தவொரு விவரமும் அறியமுடியவில்லை.

 

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் சடலங்கை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.