Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

 

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

 

திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே உள்ள சுவரில் பயங்கரமாக மோதியது.

 

இந்நிலையில் எதிரே வந்த தனியார் பேருந்து மீது அந்தக் கார் மிக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.மேலும் காரின் இஞ்சின் தனியாக கழன்று பல அடி தூரத்தில் போய் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தது. இதேபோன்று பேருந்தின் முன் பகுதியும் பலத்து சேதம் அடைந்தது. முன் சக்கரங்கள் இரண்டும் தனித்தனியாக கலந்து ஓடியது . பேருந்தின் முன்பாகம் கண்ணாடிகள் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் சென்ற ஆறு பேரில் வீரக்குமார் முருகேசன் சஜித் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயங்களுடன் இருந்த மகேஷ் குமார், கிஷோர்குமார் ,வெற்றி செல்வம் ஆகிய மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வெற்றிச்செல்வம் சிகிச்சை பயனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளாக அதிகரித்துள்ளது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Exit mobile version