Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி!

A car collides with another car!! Bama leader Anbumani's wife who was involved in an accident!

A car collides with another car!! Bama leader Anbumani's wife who was involved in an accident!

ஒரு கார் மீது மற்றொரு கார் மோதல்!! விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணி மனைவி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அவர்கள் நேற்று காலை சென்னையில் இருந்து தைலாபுரம் தோட்டத்திற்கு செல்ல புறப்பட்டார். அப்பொழுது திண்டிவனம் டு சென்னை செல்லும் வழியில் பாதிரி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில்,கார் ஒன்று அங்கிருந்த டீ கடையிலிருந்து திடீரென சாலையில் திரும்பியது.

இதனை பார்க்காத சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி ஓட்டி வந்த மற்றொரு கார் சடனாக பிரேக் அடித்தது.அந்த கார் பிரேக் அடித்ததில், இந்த காருக்கு பின்னால் வந்த மற்ற கார்களும் சட்டன் பிரேக் அடித்தனர். இதனால் ஒரு கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில் அன்புமணி மனைவி வந்த இனோவா காரும் மற்றொரு கார் மீது மோதியது. கிட்டத்தட்ட ஐந்து கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அன்புமணி  ராமதாஸ் மனைவிக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. உடனடியாக அவர் வேறொரு கார் மூலம் தைலாபுரம் சென்றார். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கார் விபத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Exit mobile version